றொரண்டோ வாகன நிறுத்துமிடத்தில் சடலம் மீட்பு – ஆசிய வம்சாவளியாக இருக்கலாமென சந்தேகம்!

றொரண்டோவில் (Toronto) உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட நபரின் மரணம், ஒரு கொலை என உறுதிப்படுத்தப்பட்டு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் உயிரிழந்தவர் ஒரு பெண் என தவறாக அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அவர் ஒரு ஆண் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் மாஸ் பார்க் (Moss Park) அருகே உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் மற்றும் சீட்டன் ஸ்ட்ரீட் (Dundas Street and Seaton Street) சந்திப்பில் அவசர மருத்துவ உதவிக்காக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த வாகன நிறுத்துமிடத்திற்குள் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 5 அடி 6 அங்குல உயரம், நடுத்தர உடல்வாகு, கறுப்பு நிற தலைமுடி மற்றும் கண்களைக் கொண்ட ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர் இறக்கும் போது இறக்கைகளுடன் கூடிய வெள்ளி நிற இதய வடிவ பதக்கம் கொண்ட சங்கிலி மற்றும் “விஷன் யூத் லீடர்ஸ் புரோகிராம்” (Vision Youth Leaders Program) என்று எழுதப்பட்ட கறுப்பு நிற ஜாக்கெட்டையும் அணிந்திருந்தார்.

பலியானவரை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles