றொரண்டோ உணவகத்தில் வெடிப்புச் சம்பவம் – திட்டமிட்ட தீவைப்பு என பொலிஸார் சந்தேகம்

றொரண்டோ  நகரின் Eglinton Avenue West மற்றும் Bathurst Street பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மற்றும் வெடிப்புச் சம்பவம் குறித்து Toronto Police தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவமாக (suspected arson) இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலை 2:43 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து அவசரப்பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த Toronto Fire மற்றும் பொலிஸார், பலத்த புகையுடன் உணவகத்தின் கட்டடம் சேதமடைந்திருப்பதைக் கண்டனர்.

இந்த வெடிப்பின் காரணமாக அருகிலுள்ள மேலும் இரண்டு வணிக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன.

எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

துப்பறியும் அதிகாரிகள் தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது தொடர்பான மொபைல் வீடியோக்கள், சிசிடிவி (surveillance) காட்சிகள் மற்றும் வாகனங்களின் டேஷ்கேம் (dashcam) பதிவுகள் வைத்திருப்போர் உடனடியாக பொலிஸாரை அல்லது Crime Stoppers அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles