றொரண்டோவில் மீண்டும் குளிர் காலநிலை – மே மாதத்தின் பாதியளவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை!

றொரண்டோவில் (Toronto) கடந்த திங்கட்கிழமை நிலவிய இதமான வெப்பமான காலநிலை மறைந்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற வானிலை திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் காணப்பட்டதைப் போன்ற குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற வானிலை மீண்டும் திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வாளர் பில் கூல்டர் (Bill Coulter) தெரிவித்துள்ளார்.

இந்த குளிரான காலநிலை மே மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்றும், அதன் பின்னரே பருவகாலத்திற்குரிய வெப்பமான வானிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று புதன்கிழமை மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 12°C ஆக மட்டுமே இருக்கும் என்றும் கனடா சுற்றாடல் துறை (Environment Canada) கணித்துள்ளது.

இது இந்த காலப்பகுதிக்குரிய சாதாரண வெப்பநிலையை விட 5°C குறைவானதாகும்.

வியாழக்கிழமை மழைக்குச் சற்று ஓய்வு கிடைத்தாலும் வெப்பநிலை 12°C ஆகவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மேகமூட்டமான வானிலையுடன் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், வெப்பநிலை 14°C முதல் 15°C வரை நிலவும்.

தற்போதைய சூழலில் மக்கள் வெளியே செல்லும்போது குடைகளையும், தடிமனான வசந்தகால ஜாக்கெட்டுகளையும் (Spring jackets) தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திடீரென மாறியுள்ள இந்த வானிலையால் ரொறன்ரோவாசிகள் மீண்டும் குளிர்கால உடைகளை அணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36

Related Articles

Latest Articles