றொரண்டோவில் தொடர் திருட்டு – 59 வயது நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!

றொரண்டோ (Toronto) மாநகரில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 59 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மார்க் ஹார்டி (Mark Hardy) என்ற நபர், கடந்த ஜனவரி 15 முதல் ஏப்ரல் 16 வரை நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது ஐந்து வெவ்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அடுக்குமாடி குடியிருப்புகளின் சேமிப்பு அறைகளை (Storage lockers) உடைத்து பொருட்களைத் திருடியதுடன், குடியிருப்புவாசிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்குள் புகுந்து திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மார்க் ஹார்டி 18 முறை அத்துமீறி நுழைந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வருகிறார்.

அவர் சுமார் ஐந்து அடி பத்து அங்குல உயரம், 200 பவுண்ட் எடை, மொட்டைத் தலை மற்றும் பச்சை நிறக் கண்கள் கொண்டவர் என பொலிஸார் விபரித்துள்ளனர்.

இந்த நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரைக் கண்டவர்கள் உடனடியாகத் தங்களை அணுகுமாறு டொராண்டோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles