றொரண்டோவில் இந்தியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் றொரண்டோவில் (Toronto) எவ்வித முன்னறிவிப்புமின்றி இரண்டு அந்நியர்களைச் சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் எட்வின் (Richard Edwin) என்பவருக்கு, 25 ஆண்டுகளுக்குப் பரோல் அற்ற ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.​

செனெகா கல்லூரியின் (Seneca College) மாணவரான 21 வயது கார்த்திக் வாசுதேவ் (Kartik Vasudev) மற்றும் எலிஜா மஹேபாத் (Elijah Mahepath) ஆகிய இருவர் எவ்வித தூண்டுதலுமின்றி எட்வினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை (Planned and deliberate) என நீதிபதி ஜேன் கெல்லி (Justice Jane Kelly) உறுதிப்படுத்தினார்.

கொலையாளிக்கு மனநல பாதிப்பு (Schizophrenia) இருந்தபோதிலும், தனது செயலின் தீய விளைவுகளை அவர் அறிந்திருந்தார் எனக் கூறி, அவரின் தண்டனையைக் குறைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

கார்த்திக் வாசுதேவ் ஷெர்போர்ன் (Sherbourne) ரயில் நிலையத்திற்கு அருகே வேலையிலிருந்து திரும்பியபோது கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பின் எலிஜா மஹேபாத் இதே முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

“தனது மகனுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருந்து நீதியைப் பெற்றுள்ளேன்” என கார்த்திக்கின் தாயார் பூஜா கண்ணீருடன் தெரிவித்தார்.

எட்வின் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய போதிலும், “எங்கள் மகனைப் பறித்த பின் இந்த மன்னிப்பினால் பயன் ஏதுமில்லை” என கார்த்திக்கின் தந்தை ஜிதேஷ் (Jitesh) அதனை நிராகரித்தார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles