ரொறன்ரோ மயானங்களில் சாம்பல் வைக்கும் பகுதிகளை உடைத்து  கொள்ளை – 140க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

ரொறன்ரோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மயானங்களில், அடக்கம் செய்யப்பட்டவர்களின் சாம்பல் வைக்கப்படும் அறைகளை (Niches) உடைத்து விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 31 வயதுடைய பெண் ஒருவரும் Niagara Falls பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சடலங்களுக்கு அவமதிப்பு செய்தல் மற்றும் திருட்டு உட்பட 140 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சுமார் 51 கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொருட்களில், இதுவரை 26 பொருட்கள் மட்டுமே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பல தங்க நகைகள் உருக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என Halton பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மயான நிர்வாகங்கள் தற்போது பாதுகாப்பை அதிகரித்துள்ள போதிலும், விலையுயர்ந்த பொருட்களை மயான அறைகளில் வைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

Related Articles

Latest Articles