ரொறன்ரோவில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து குழந்தை பலி!

றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து விழுந்து சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:20 மணியளவில், ஹைவே 401-க்கு தெற்கே உள்ள டான் மில்ஸ் ரோட் (Don Mills Road) மற்றும் கிரேடன் ஹால் டிரைவ் (Graydon Hall Drive) சந்திப்புக்கு அருகில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.​

குறித்த குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அக்குழந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குழந்தை எந்தத் தளத்திலிருந்து விழுந்தது என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

உயிரிழந்த குழந்தையின் வயது அல்லது அடையாளம் குறித்த மேலதிக தகவல்களைப் பொலிஸார் தற்போதைக்கு வழங்க மறுத்துவிட்டனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் (Toronto Police) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles