ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு – பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!

ரெஜினா (Regina) நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியூட்ரி கிரசென்ட் (Mutrie Crescent) பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரெஜினா பொலிஸ் சேவை (Regina Police Service) வெளியிட்டுள்ள பாதுகாப்பு கெமரா காணொளியில், அந்த நபர் வாகனத்தின் ஜன்னல் வழியாக உள்ளே தீ வைப்பது தெளிவாகத் தெரிகிறது.

சனிக்கிழமை, ஏப்ரல் 11 நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ வைத்த சில நொடிகளில் வாகனத்தின் உட்புறம் தீப்பிடித்து, அந்த நபர் மீதே தீ பாய்ந்ததால் அவர் பின்னோக்கி ஓடுவது பதிவாகியுள்ளது.

பின்னர், வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் துணியை வைத்துத் தீ வைக்க முயற்சித்தும், அது தோல்வியடைந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, ரோந்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தீயணைப்பானைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது வாகனத்திற்குள் யாரும் இருக்கவில்லை என்பதால் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25
Video thumbnail
கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!
01:31

Related Articles

Latest Articles