மொண்ட்ரியலில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? பொலிஸார் விளக்கம்

கனடாவின் மொண்ட்ரியாலில் (Montreal) ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவிலியன் உட்பட மூன்று பேர் உயிரிழப்பதற்குக் காரணமான துப்பாக்கிச்சூடு சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று கியூபெக் (Quebec) பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் திங்கட்கிழமை காலை நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை அடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பல மணிநேர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் மற்றொரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

மேலும் ஒரு சிவிலியன் லேசான காயங்களுக்குள்ளானார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, 2021 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது லமைன் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) என மொண்ட்ரியால் காவல்துறை (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி - இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!
01:13
Video thumbnail
கனடாவில் கொடூரக் கொலை - 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!
00:55
Video thumbnail
ஜி.டி.ஏ புதிய வீட்டு விற்பனையில் முன்னேற்றம் - பின்னடைவைச் சந்திக்கும் காண்டோ சந்தை!
01:23
Video thumbnail
றொரண்டோ ஃபிபா உலகக்கிண்ண வலயங்களில் ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது குற்றச்சாட்டு!
01:03
Video thumbnail
பியூஸ் துப்பாக்கிச் சூடு - வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் இளைஞர் கைது!
00:52
Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07

Related Articles

Latest Articles