மெக்சிகோவின் தீவிரமாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் “El Mencho” அழைக்கப்படு என்று அழைக்கப்படும் Nemesio Oseguera Cervantes இராணுவ நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மெக்சிகோ முழுவதும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது.
Jalisco New Generation Cartel அமைப்பின் தலைவனான இவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக, அந்த அமைப்பினர் நடத்திய 6 வெவ்வேறு தாக்குதல்களில் 25 மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் (National Guard troops) கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் Omar García Harfuch உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் உதவியுடன் Jalisco மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில், சுமார் 30 சந்தேக நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் மெக்சிகோவின் பல மாநிலங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன்,பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி, வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குறிப்பாக Guadalajara உயிரியல் பூங்காவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் பலப்படுத்தபட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.










