அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) வர்த்தகப் போருக்கு, மார்க் கார்னி (Mark Carney) அளித்து வரும் பதிலடி குறித்து பிரபல எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான நவோமி கிளீன் (Naomi Klein) தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தான் எழுதிய ‘தி ஷாக் டாக்ட்ரின்: தி ரைஸ் ஆஃப் டிசாஸ்டர் கேபிடலிசம்’ (The Shock Doctrine: The Rise of Disaster Capitalism) என்ற புத்தகத்தின் முக்கிய கருத்துக்களை அப்படியே எதிரொலிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருக்கடி காலங்களைப் பயன்படுத்தி, மக்களின் கவனத்தைத் திருப்பி, தீவிர பொருளாதார மாற்றங்களை திணிப்பதே இந்த கோட்பாட்டின் மையக்கருத்தாகும்.
மேலும், தனது சமீபத்திய நூலான ‘எண்ட் டைம்ஸ் பாசிசம்: அண்ட் தி ஃபைட் ஃபார் தி லிவிங் வேர்ல்ட்’ (End Times Fascism: And the Fight for the Living World) குறித்தும் கலந்துரையாடிய நவோமி கிளீன் (Naomi Klein), தற்போதைய அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்துத் தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளார்.
