மார்க்கம் நகரில் பயங்கர தீ விபத்து – மூவர் காயம், பல வீடுகள் வெளியேற்றம்!

கனடாவின் மார்க்கம் (Markham) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை சுமார் 6:45 மணியளவில் கார்லேடன் (Carleton Road) மற்றும் கென்னடி (Kennedy Road) வீதிகளுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ மிக வேகமாக அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்கும் பரவியதை அடுத்து, அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஒருவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போதைய முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தத் தீ விபத்தில் சந்தேகத்திற்கிடமான பின்னணி எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் பணிகள் மற்றும் விசாரணைகள் காரணமாக சாம்ப்ரி கிரசண்ட் (Chambery Crescent) இருபுறமும் உள்ள கார்லேடன் வீதி (Carlton Road) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles