மலிவு விலை நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும் கனடியர்கள் புதிய ஆய்வுத் தகவல்!

கனடாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு விலைகள் காரணமாக, கணிசமான மக்கள் நாட்டின் ஏனைய மலிவு விலை நகரங்களுக்கு இடம்பெயர விரும்புவதாகப் புதிய ஆய்வொன்று தெரிவிவித்துள்ளது.

ரோயல் லேபேஜ் (Royal LePage) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய இந்த ஆய்விலேயே இந்த விடயம் அறியப்பட்டுள்ளது.

றொரண்டோ (Greater Toronto Area) பகுதியில் 55 சதவீதத்தினரும், மொன்றியலில் (Greater Montreal Area) 48 சதவீதத்தினரும், வான்கூவரில் (Greater Vancouver Area) 46 சதவீதத்தினரும் தங்களுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் மிக மலிவான 15 நகரங்களில் ஒன்றிற்கு இடம்பெயரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கனடாவின் மிகவும் மலிவு விலை நகரங்களின் பட்டியலில் லெத்பிரிட்ஜ் (Lethbridge, Alta.) முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கு சராசரி வீட்டின் விலை $338,700 ஆகவும், மாதாந்திர அடமானக் கட்டணம் (Mortgage) $1,520.85 ஆகவும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து செயின்ட் ஜான் (Saint John, N.B.), தண்டர் பே (Thunder Bay, Ont.) மற்றும் ரெட் டீர் (Red Deer, Alta.) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

குறிப்பாக, இளைய தலைமுறையினரான ஜென் ஜி (Gen Z) பிரிவினரில் 77 சதவீதத்தினரும், மில்லினியல்களினில் (Millennials) 56 சதவீதத்தினரும் இவ்வாறான இடமாற்றங்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறைந்த வாழ்க்கைச் செலவு, அமைதியான வாழ்க்கைச் சூழல் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்விடத்தேவை ஆகியவையே இந்த எண்ணத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக ரோயல் லேபேஜ் (Royal LePage) நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி பில் சோப்பர் (Phil Soper) குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
6 மாதங்களில் 3,323 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றம்!
01:56
Video thumbnail
6 மாதங்களில் 3,323 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றம்!
01:17
Video thumbnail
சில மணி நேரங்களில் 5,000 hectares வரை பரவிய காட்டுத்தீ — Summerland முழுவதும் வெளியேற்ற உத்தரவு!
00:54
Video thumbnail
“Trump-க்கு இனியும் விட்டுக்கொடுக்காதீர்கள்!” — Carney-க்கு Poilievre கடிதம்.
01:23
Video thumbnail
ஒரே இரவில் மாறிய Summerland — வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள்!
00:54
Video thumbnail
“AUG 12 இரவு வானத்தைப் பாருங்கள்! Toronto வானில் தெரியவுள்ள அரிய காட்சி!
02:05
Video thumbnail
Canada Kanthaswamy Temple Society Scarborough
01:17
Video thumbnail
Everyone Loves Marineland - 20 திமிங்கிலங்கள் உயிரிழந்தது எப்படி?
02:13
Video thumbnail
U.S. booze மீண்டும் LCBO shelves-க்கு வந்தால் வாங்குவீர்களா?
01:15
Video thumbnail
McGill பல்கலைக்கழகத்திற்கு எதிராக யூத மாணவர்களின் கூட்டுவழக்கு முயற்சி!
01:25

Related Articles

Latest Articles