ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர்ச் சூழல், கனடிய வங்கியின் (Bank of Canada) வட்டி விகிதத் தீர்மானங்களில் பெரும் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை வங்கியின் இரண்டாவது வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது வட்டி விகிதம் 2.25 சதவீதமாக உள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தில் 84,000 வேலைவாய்ப்புகள் பறிபோனதும், வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாக உயர்ந்ததும் பொருளாதாரப் பின்னடைவைக் காட்டுகின்றன.
இருப்பினும், போரினால் Strait of Hormuz கடல்வழி தடைப்பட்டு, உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், கனடாவில் மீண்டும் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என BMO தலைமை பொருளாதார நிபுணர் Doug Porter எச்சரித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில், பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டுமா அல்லது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உயர்த்த வேண்டுமா என்ற இரட்டைச் சவாலை வங்கித் ஆளுநர் Tiff Macklem எதிர்கொண்டுள்ளார்.
பெரும்பாலான சந்தை ஆய்வாளர்கள் இம்முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றே கணித்துள்ளனர்.










