பராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் நின்றிருந்த ‘டோ ட்ரக்’ (Tow Truck) ஒன்றின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்
இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு முன்னதாக, போவெய்ட் டிரைவ் ஈஸ்ட் (Bovaird Drive East) மற்றும் மவுண்டன் ஆஷ் வீதி (Mountainash Road) சந்திப்பிற்கு அருகிலுள்ள பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் (Peel police), அங்குள்ள வாகனத் தரிப்பிடத்தில் நின்றிருந்த ஒரு ‘டோ ட்ரக்’கை இலக்கு வைத்து துப்பாக்கிச் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்கள் குறித்த எவ்வித அடையாள விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமராக்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










