பெற்றோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் றொரண்டோவில் நடமாட்டம்!

மிசிசாகா (Mississauga) பகுதியில் தனது வயதான பெற்றோரை படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் 46 வயது நபர், றொரண்டோ (Toronto) நகரில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) எச்சரித்துள்ளனர்.

ஜோர்டான் சாங்வின் (Jordan Sangwin) என்ற இந்த சந்தேக நபர், கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் றொரண்டோவின் ஹை பார்க் (High Park) பகுதிக்கு அருகில் கடைசியாகப் பார்க்கப்பட்டதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது புதிய புகைப்படங்கள் மற்றும் அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சாம்பல் நிற நீண்ட கை சட்டை மற்றும் கறுப்பு நிற அரைகாற்சட்டை (Shorts) அணிந்து, கறுப்பு நிற டபிள் பேக் (Duffle bag) ஒன்றை அவர் ஏந்திச் செல்வதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அவர் ஆபத்தானவர் என்பதால், பொது மக்கள் யாரும் அவரை நெருங்க வேண்டாம் என்றும், கண்டால் உடனடியாக 911 என்ற அவசர எண்ணுக்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 18 அன்று மிசிசாகாவின் லேக்ஷோர் ரோடு ஈஸ்ட் (Lakeshore Road East) மற்றும் ஹுரொன்டாரியோ ஸ்ட்ரீட் (Hurontario Street) பகுதிக்கு அருகில் உள்ள வீட்டில், தனது பெற்றோரைக் கொன்றதாக ஜோர்டான் (Jordan) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
Everyone Loves Marineland - 20 திமிங்கிலங்கள் உயிரிழந்தது எப்படி?
02:13
Video thumbnail
U.S. booze மீண்டும் LCBO shelves-க்கு வந்தால் வாங்குவீர்களா?
01:15
Video thumbnail
McGill பல்கலைக்கழகத்திற்கு எதிராக யூத மாணவர்களின் கூட்டுவழக்கு முயற்சி!
01:25
Video thumbnail
online-ல் 'easy money' offer வந்தால்? அதன் பின்னால் ஒரு criminal network இருக்க முடியுமா?
01:20
Video thumbnail
சில மணி நேரங்களில் 5,000 hectares வரை பரவிய காட்டுத்தீ — Summerland முழுவதும் வெளியேற்ற உத்தரவு!
00:58
Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11

Related Articles

Latest Articles