புயலில் சிதைந்த Rogers Stadium – AC/DC இசை நிகழ்ச்சிக்கு பாதிப்பா?

டொராண்டோவை தாக்கிய சக்திவாய்ந்த புயலால், நகரின் Downsview Park பகுதியில் அமைந்துள்ள Rogers Stadium கடுமையாக சேதமடைந்துள்ளது.

செப்டம்பர் 2ஆம் திகதி புதன்கிழமை மாலை வீசிய கடும் காற்று மற்றும் கனமழையைத் தொடர்ந்து, Stadium-இன் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் அமரும் பல வரிசை இருக்கைகள் முழுமையாக சிதைந்து ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கிடப்பதையும், Stadium முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் காண முடிகிறது.

இருப்பினும், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என Stadium நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சேதத்தின் முழுமையான அளவு மற்றும் அதனை சரிசெய்வதற்கான செலவு குறித்து தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செப்டம்பர் 16ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற AC/DC இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி Rogers Stadium-இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 50,000 பேரை உள்ளடக்கக்கூடிய இந்த Stadium-இல் ஏற்பட்டுள்ள சேதம், அந்த நிகழ்ச்சியை பாதிக்குமா என்பது இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles