புதிய வீடுகளுக்கான கட்டணம் 50% குறைப்ப – ஒன்டாரியோ மற்றும் மத்திய அரசு இடையே ஒப்பந்தம்!

ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் புதிய வீடுகளின் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில், நகராட்சிகளால் வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணங்களை (Development charges) 50 சதவீதம் வரை குறைக்க பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் ஒன்டாரியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இது குறித்து டொராண்டோ பகுதியில் நடைபெறும் நிகழ்வொன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வீடுகளின் விலையை உயர்த்துவதில் முக்கிய காரணியாக இருக்கும் இந்த மேம்பாட்டுக் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம், முதல்முறை வீடு வாங்குபவர்களுக்குப் பெரும் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசு தனது பில்ட் கம்யூனிட்டீஸ் ஸ்ட்ராங்‘ (Build Communities Strong Fund) நிதியிலிருந்து மாகாணங்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளது.

கடந்த வாரம் புதிய வீடுகளுக்கான 13 சதவீத எச்.எஸ்.டி (HST) வரியை நீக்குவதாக இரு அரசுகளும் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், நகராட்சிகள் தங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு இந்த மேம்பாட்டுக் கட்டணங்களையே நம்பியுள்ளன.

இந்தக் கட்டணக் குறைப்பால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட, ஏற்கனவே வீடு வைத்துள்ளவர்களின் சொத்து வரி (Property tax) சராசரியாக 20 சதவீதம் வரை உயரக்கூடும் என ஒன்டாரியோ நகராட்சிகளின் சங்கம் (Association of Municipalities of Ontario) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளைக் கட்ட வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த நடவடிக்கை உதவும் என கனடிய அரசு நம்புகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles