பிராம்ப்டனில் கார் விபத்து – கவலைக்கிடமான நிலையில் சாரதி வைத்தியசாலையில் அனுமதி!

கனடா, பிராம்ப்டன் (Brampton) பகுதியில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர கார் விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர், ஆபத்தான நிலையில் அவசர முதலுதவி பிரிவு மருத்துவமனையில் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளார்க் விசிதி மற்றும் வெஸ்ட் டிரைவ் (Clark Boulevard and West Drive) சந்திப்புப் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் மாத்திரம் இந்த விபத்தில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. வேறு வாகனங்கள் எதற்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விபத்து மறுசீரமைப்பு அதிகாரிகள் (Collision Reconstruction Officers) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், கிளார்க் வீதி மற்றும் நெடுஞ்சாலை 410 (Clark Boulevard and Hwy. 410) இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மதிய வேளை வரை இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles