பிராம்ப்டனின் புதிய முகம் – மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!

பிராம்ப்டன் (Brampton) நகரம் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையத்திலிருந்து (Advanced manufacturing hub), சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது.

நகரின் பொருளாதார எதிர்காலத்திற்கு உயிர் அறிவியல் துறை ஒரு முக்கிய உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

றொரண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் (TMU), பிராம்ப்டனில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் திறந்துள்ளது.

இதன் மூலம் 2029-ஆம் ஆண்டிலேயே முழுமையான மருத்துவர்கள் வெளிவருவார்கள் என்றாலும், இந்த ஆண்டே 11 புதிய மருத்துவர்கள் பயிற்சியை முடித்து களமிறங்க உள்ளனர்.

உயிர் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மிகவும் அவசியமான வெட் லேப்வசதியை பிராம்ப்டனில் உருவாக்க வேண்டும் என்று மாநகரத் துணை மேயர் ஹர்கிரத் சிங் (Harkirat Singh) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்ராறியோ (Ontario) மாகாணம் முழுவதும் இத்தகைய ஆய்வகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏற்கனவே Medtronic, Boston Scientific போன்ற பெரிய நிறுவனங்கள் இங்குள்ள நிலையில், புதிய ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்களையும் ஈர்த்து ஒரு முழுமையான மருத்துவ சூழலை (Ecosystem) உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிராம்ப்டனைச் சுற்றியுள்ள 30 நிமிட பயண தூரத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட பயோடெக்னாலஜி நிறுவனங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டங்கள் மூலம் பிராம்ப்டன் மாநகரம் கனடாவின் ஒரு மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles