கனடாவின் பீல் பிராந்திய பொது சுகாதார அதிகாரிகள், இரண்டு விமானங்கள் மற்றும் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற பயணிகளுக்குத் தட்டம்மை (Measles) தொற்று பரவியிருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி, பங்களாதேஷில் இருந்து ரோம் (Rome) வழியாக றொரண்டோ வந்த Flight BG305 மற்றும் றொரண்டோவில் இருந்து Moncton சென்ற Flight AC1986 ஆகிய விமானங்களில் பயணித்தவர்கள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், அன்றைய தினம் மதியம் 1:11 மணி முதல் இரவு 11:45 மணி வரை Pearson விமான நிலையத்தின் Terminal 3 மற்றும் Terminal 1 இல் இருந்தவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பீல் சுகாதாரப் பிரிவின் மருத்துவர் Dr. Atiba Nelson மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களைத் தங்களது தடுப்பூசி விபரங்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூலை 28 ஆம் தேதி வரை காய்ச்சல், இருமல் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜூன் 23 நிலவரப்படி Ontario மாகாணத்தில் மொத்தம் 27 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.










