நெடுஞ்சாலை 401-இல் விபரீதம் – குடிபோதையில் எதிர் திசையில் வந்த வாகனம் மோதி ஒருவர் பலி!

நெடுஞ்சாலை 401-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு பாரிய விபத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2:40 மணியளவில் Salem Road பகுதியில் பிக்கப் ட்ரக் ஒன்று தவறான திசையில் அதிவேகமாக வந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இதில் 38 வயதுடைய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிக்கப் ட்ரக்கை ஓட்டி வந்த 41 வயது நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முதல் விபத்தை விசாரணை செய்துகொண்டிருந்தபோது, அதிகாலை 4:30 மணியளவில் மற்றொரு வாகனம் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி பொலிஸ் வாகனத்தின் மீது மோதியது.

இதில் டர்ஹாம் (Durham) பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 52 வயதுடைய ஓட்டுநர் காயமடைந்தனர்.

இரண்டாவது விபத்து குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIU) தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விபத்துக்கள் காரணமாக நெடுஞ்சாலை 401-இன் கிழக்கு நோக்கிய பாதைகள் பல மணிநேரம் மூடப்பட்டுக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles