டொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!

கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) அதிகாரப்பூர்வமாக இலையுதிர்காலம் (Fall) தொடங்கியுள்ளது.

இந்த பருவத்தில் வழக்கத்தை விட மிதமான மற்றும் வெதுவெதுப்பான காலநிலை நிலவும் என Environment Canada-வின் காலநிலை நிபுணர் David Phillips தெரிவித்துள்ளார்.

இலையுதிர்காலத்தின் தொடக்க வாரங்களில் நல்ல சூரிய வெளிச்சத்துடன் 20°C வரை இதமான வெப்பநிலை நிலவும் என்றும், உடனடியாக அதிகக் குளிர் தொடங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் வழக்கத்தை விட கதகதப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் புயல்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் David Phillips கூறியுள்ளார்.

மேலும், கடந்த கோடைகாலத்தில் பெய்த அதிக மழை காரணமாக, மரங்களின் இலைகள் நிறம் மாறுவது இந்த ஆண்டு வழமையை விட இரண்டு வாரங்கள் தாமதமாகி, Thanksgiving மற்றும் Remembrance Day இடைப்பட்ட காலத்தில் உச்சத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles