டொமினிகன் குடியரசில் கோர பஸ் விபத்து: கனடிய சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழப்பு; 13 பேருக்கு காயம்

டொமினிகன் குடியரசில் (Dominican Republic) இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்தில் இரண்டு கனடிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் சாண்டோ டொமிங்கோவிற்கு (Santo Domingo) கிழக்கே உள்ள லா ரோமனா (La Romana) என்ற சுற்றுலாப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

புன்டா கானா (Punta Cana) விமான நிலையத்திலிருந்து ஜுவான் டோலியோ (Juan Dolio) கடற்கரை நகரிலுள்ள விடுதிக்கு நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருவதாக டொமினிகன் குடியரசிற்கான கனடிய தூதரகம் (Canadian Embassy) அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles