டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அடுத்தகட்ட நகர்வை உன்னிப்பாகக் கவனிக்கும் கனடியர்கள்!

கியூபாவில் (Cuba) ஏற்பட்டுள்ள பாரிய மின்சாரத் தடை காரணமாக சுமார் 11 மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், கியூபாவின் ஆட்சி மாற்றத்தைக் குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்டுள்ள கருத்துக்கள் கனடாவில் வாழும் கியூப வம்சாவளியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மொன்றியலில் (Montreal) உள்ள ‘Le Cecilia’ உணவக உரிமையாளர் Alexy Dias Arcia மற்றும் சமூக ஆர்வலர் Antonio Tang ஆகியோர், கியூபாவில் நிலவும் பொருளாதாரச் சரிவு மற்றும் உணவுத் தட்டுப்பாடு குறித்துத் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கியூபா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கியூபா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளதோடு, வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கியூபாவில் புதிய தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“கியூப அரசு பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது” எனத் கவலை தெரிவிக்கும் கியூபா மக்கள், இந்த நெருக்கடியிலிருந்து மீள ஒரு அதிசயம் நிகழும் என காத்திருப்பதாக அங்கலாய்க்கின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles