ஜெட் போட் மூலம் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்த கனேடியர் – இணையத்தில் வைரலாகும் பரபரப்பு காட்சி!

கனடாவின் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள லண்ட்பிரெக் நீர்வீழ்ச்சியிலிருந்து (Lundbreck Falls) நபர் ஒருவர் தனது ஜெட் போட் (Jet boat) மூலம் ஆபத்தான முறையில் குதித்து சாதித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் (B.C.) சேர்ந்த டஸ்டி பிரீஸன் (Dusty Friesen – @DustyDoeser) என்ற நபரே, ‘டென்ட்’ (Dent) எனப் பெயரிடப்பட்ட தனது படகுடன் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

உலகப் பெருங்கடல்களைச் சுத்தம் செய்வதற்கான நிதி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது இந்த சாகசத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குரோஸ்நெஸ்ட் (Crowsnest Pass) பகுதியில் அமைந்துள்ள இந்த லண்ட்பிரெக் நீர்வீழ்ச்சியானது சுமார் 9 மீற்றர் (30 அடி) உயரமுடையதாகும்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்ட ஆலோசனைகளுடன் இந்த சாகசம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாகசம் தொடர்பாக அல்பெர்ட்டா குதிரைப்படை காவல்துறை (Alberta RCMP) விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், தான் எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என டஸ்டி பிரீஸன் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனைக்காக (Guinness World Record) முயற்சிக்கப்பட்ட இந்த சாகசத்தை அடுத்து, தேவையான அனுமதிகளைப் பெற்று கனடாவின் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியிலும் (Niagara Falls) எதிர்காலத்தில் இவ்வாறான சாகசத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles