சுற்றுலா ரத்து – விமான டிக்கெட்டுக்கு $1,800 இழந்த ஒன்டாரியோ தம்பதி!

ஒன்டாரியோ மிசிசிகாவைச் சேர்ந்த Janet Sumali மற்றும் அவரது கணவர், Switzerland சுற்றுலாவுக்காக ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு TripToGo நிறுவனத்தின் வழியாக சுற்றுலாவை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், பயணம் தொடங்க ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், போதிய முன்பதிவுகள் இல்லாததால் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக நிறுவனம் அறிவித்தது.

இதற்காக சுற்றுலா தொகை திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தாலும், தனியாக Expedia மூலம் வாங்கிய Paris செல்லும் இருவழி விமான டிக்கெட்டுக்காக செலுத்திய 1,800 கனேடிய டொலர் திருப்பி வழங்கப்படவில்லை.

TripToGo நிறுவனம், விமான டிக்கெட்டுகள் தங்களின் முன்பதிவில் இடம்பெறாததால் அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து Travel Industry Council of Ontario (TICO), விமானமும் சுற்றுலாவும் ஒரே தொகுப்பாக முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே முழுப் பணமும் திருப்பி வழங்கப்படும்.

ஆனால், தனித்தனியாக முன்பதிவு செய்திருந்தால், அது ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த அனுபவம், வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும் கனேடியர்கள் தனித்தனி முன்பதிவுகள் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக Janet Sumali தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles