சட்டசபையில் தனிப்பட்ட விமர்சனம் – லிபரல் உறுப்பினரிடம் மன்னிப்புக் கேட்டார் டக் போர்ட்!

கடந்த வாரம் ஒன்ராறியோ சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது, லிபரல் கட்சி உறுப்பினர் ஸ்டெபானி ஸ்மித்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக முதல்வர் டக் போர்ட் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்து ஸ்மித் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த டக் போர்ட், “ஸ்மித் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பணியாற்றிய CP24 ஊடகம் அவரை விரும்பாததால்தான் அவர் இங்கு (சட்டசபைக்கு) வந்துள்ளார்” என்று தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், சபையில் மன்னிப்புக் கேட்க அப்பொழுது அவர் மறுத்துவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்மித், முதல்வர் தன்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அதைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக்குள் நுழையும் போது மக்களின் நலனுக்காகச் சிறந்த முறையில் செயல்பட வேண்டியது அனைவரினதும் கடமை என்று ஸ்மித் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles