குளிர்காலத்தைக் சமாளிக்க டொராண்டோவில் 1,500க்கும் மேற்பட்ட கூடுதல் தங்குமிடங்கள்!

citynews

குளிர்காலத்தைத் எதிர்கொள்ளும் வகையில், வீடற்ற நபர்களுக்காக 1,500 க்கும் மேற்பட்ட கூடுதல் தங்குமிடம் மற்றும் வீட்டுவசதி இடங்களை உருவாக்கவுள்ளதாக டொராண்டோ (Toronto) மாநகரசபை தனது வருடாந்த குளிர்கால சேவைத் திட்டத்தில் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாக, மொத்தம் 1,533 புதிய இடங்கள் திறக்கப்படவுள்ளன. இதில் 588 நிரந்தர மானிய அடிப்படையிலான வீடுகளும், சுமார் 505 புதிய தற்காலிக தங்குமிடம் மற்றும் 24 மணி நேர ஓய்வு மைய இடங்களும் அடங்கும்.

வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸாகக் குறையும் போது 5 இடங்களில் 254 கதகதப்பான மைய இடங்களும் (Warming centres), மைனஸ் 15 டிகிரி செல்சியஸைத் தொடும் போது மேலும் 186 கூடுதல் இடங்களும் செயல்படத் தொடங்கும்.

அத்துடன் தெருக்களில் தங்குபவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரக் கூடுதல் வீதி உலாப் படைகளும் களமிறக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டை விட நகரில் வீடற்றோரின் எண்ணிக்கை 8.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 4,100 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் இருந்து நிரந்தர வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ மாநகரசபை தெரிவித்துள்ளது.

Previous articleகனடா போஸ்ட் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு: உள்நாட்டு பார்சல் சேவைகள் பாதிப்பு!