காலநிலை முன்னறிவிப்பில் புதிய புரட்சி -கனடா சுற்றாடல் துறை செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துகிறது!

கனடா சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (Environment and Climate Change Canada), பாரிய காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த புதிய முன்னறிவிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டே வானிலை கணிப்பு முறைகள் இயங்கின.

தற்போது, பல தசாப்த கால வரலாற்றுத் தரவுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணிக்கும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் புதிய முயற்சியாக உள்ளக அளவிலான கடும் காற்று மற்றும் புயல்களைத் துல்லியமாகக் கணிக்க, பாரம்பரிய இயற்பியல் முறைகளையும் AI தொழில்நுட்பத்தையும் இணைத்த ஒரு கலப்பு முறையைத் திணைக்களம் உருவாக்கியுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் வெப்ப அலைகள் மற்றும் சூறாவளி போன்ற பெரிய அளவிலான வானிலை மாற்றங்களை அரை நாள் முதல் ஒரு நாள் வரை முன்கூட்டியே எச்சரிக்க முடியும்.

வழக்கமாக வானிலை கணிப்பில் இத்தகைய துல்லியமான முன்னேற்றத்தை அடைய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும்.

ஆனால், AI உதவியுடன் இந்த இலக்கை வெறும் ஒன்றரை ஆண்டுகளில் எட்ட முடிந்துள்ளதாக விஞ்ஞானி சையத் ஹுசைன் (Syed Husain) தெரிவித்துள்ளார்.

கனடா போன்ற பரந்த நிலப்பரப்பு கொண்ட நாட்டில், இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கைகள் பலரது உயிரைக் காக்கவும், பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம், தற்போதுள்ள ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை இனி ஆறு நாட்களுக்கு நீட்டிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles