காதலன் கொலை: தற்காப்புக்காக குத்திய ஒன்டாரியோ பெண்!

ஒன்டாரியோவின் நியூமார்க்கெட் (Newmarket) நகரில், 2024 ஜூலையில் தனது முன்னாள் காதலனைக் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மெக்கன்சி கில் (McKenzie Gill – 32) என்ற பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை திங்கட்கிழமை தொடங்கியது.

மில்லார்ட் அவென்யூ (Millard Ave) குடியிருப்பில் பிளேக் பிப்பி (Blake Bibby – 36) என்பவர் கடந்த 2024-இல் இறந்து கிடந்தார்.

அவர் குடும்ப வன்முறையால்தான் கொல்லப்பட்டார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், தான் தற்காப்புக்காகவே (Self-defence) அவரை குத்தியதாகக் மெக்கன்சி கில் வாதாடியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவில் ஏற்கனவே பல்வேறு குடும்ப வன்முறைப் புகார்களும், பொலிஸ் வழக்குகளும் இருந்துள்ளன.

குறிப்பாக, பிளேக் பிப்பி, மெக்கன்சி கில்லைத் தொடர்புகொள்ளக் கூடாது என நீதிமன்றம் முன்னரே தடை விதித்திருந்தது.

இந்த வழக்கின் முதல் சாட்சியாக பிளேக் பிப்பியின் தாயார் நீதிமன்றக் கூண்டில் ஏறினார்.

அவரிடம் பிப்பியின் முந்தைய வன்முறைச் செயல்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பு வழக்கறிஞர் ஷெரிப் போடா (Sherif Foda) குறுக்கு விசாரணை நடத்தினார்.

நீதிபதி வனேசா கிறிஸ்டி (Justice Vanessa Christie) முன்னிலையில் இந்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles