கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!

கனடாவின் கல்கரி (Calgary) நகரில் புதிய நீர் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் (Water restrictions) அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, நகர மக்கள் தங்களது நீர் நுகர்வைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.

Bearspaw South Feeder Main முக்கிய நீர் குழாயின் இறுதிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பணிகள் சுமார் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர நிர்வாகத்தின் தரவுகளின்படி, புதன்கிழமை கல்கரியின் மொத்த நீர் பயன்பாடு 490 மில்லியன் லீட்டராகப் பதிவாகியுள்ளது.

இது நகரின் பாதுகாப்பான பயன்பாட்டு இலக்கான 500 மில்லியன் லீட்டருக்கும் குறைவாக (பச்சை மண்டலத்தில்) உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தங்களது வெளிப்புற நீர் பயன்பாட்டைக் முற்றிலுமாகத் தவிர்க்குமாறும், பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் இயந்திரங்களை முழுமையாக நிரப்பி மட்டுமே இயக்குமாறும், கழிப்பறை பயன்பாட்டைக் குறைத்து குளிக்கும் நேரத்தை 3 நிமிடங்களுக்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வெளிப்புற நீர் தடை காரணமாக, WinSport நிறுவனத்தின் செயற்கைப் பனி உருவாக்கும் (snowmaking) பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Video thumbnail
Moon World Resorts : கனடாவில் வரவிருக்கும் பிரம்மாண்ட திட்டம்
01:25
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் தம்பதிக்கு $60,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:17
Video thumbnail
கனடாவில் நுளம்பு காலம் நீடிப்பதற்கான காரணம் என்ன?
01:32
Video thumbnail
Toronto பகுதியில் ஒக்டோபரில் வீடு விற்பனை 8% சரிவு!
01:18
Video thumbnail
18 மாதங்களில் நூற்றுக்கணக்கான குற்றச் செயல்கள்: மிசிசாகாவில் 2 வீடுகளைக் கையகப்படுத்த முடிவு!
01:26
Video thumbnail
GTAவில் வீட்டு விநியோக சேவையை நிறுத்துகிறது கனடா போஸ்ட்!
01:01
Video thumbnail
அமெரிக்காவின் புதிய விமான தாமத விதிகள்: கனடிய பயணிகளுக்கு பாதிப்பா?
01:11
Video thumbnail
கனடாவில் சக நண்பனைக் கொன்று சடலத்தை வீசிய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!
00:17
Video thumbnail
Toronto வில் எரிபொருள் விலை வீழ்ச்சி: புதன்கிழமை லீட்டருக்கு 11 சதம் குறைகிறது!
00:58
Video thumbnail
ஹாலோவீன் விழாவில் 50,000 பயணிகள்: Toronto மேயர் தீவிர ஆய்வு நடவடிக்கை!
00:57

Related Articles

Latest Articles