கனடா (Canada) மற்றும் அமெரிக்காவில் (United States) விற்பனை செய்யப்பட்ட இன்மோ ஸ்மார்ட் கிளாஸ் ஏஆர்3 (INMO Smart Glass AIR3) ரக செயற்கை நுண்ணறிவு (AI) கண்ணாடிகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் பயன்படுத்தும்போது இக்கண்ணாடியின் இடது பகுதி அதிகளவில் வெப்பமடைந்து, முகத்தில் தீக்காயங்கள் (Burn hazard) ஏற்படும் அபாயம் இருப்பதாக Health Canada எச்சரித்துள்ளது.
பயனர்கள் இக்கண்ணாடியைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டு, அதன் மென்பொருளை (Firmware) ‘பதிப்பு 3.16′ (Version 3.16) ஆகப் புதுப்பிக்குமாறு (Update) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்ணாடியின் வலது சட்டத்தின் உட்பகுதியில் ‘AIR3’ என்ற லேபிள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அமெரிக்காவில் இக்கண்ணாடி அதிகளவில் வெப்பமடைந்து, முகம் மற்றும் இடது காதுப் பகுதியில் எரிச்சல் மற்றும் தீக்காய உணர்வு ஏற்பட்டதாக 10 புகார்கள் பதிவாகியுள்ளன. எனினும், கனடாவில் இதுவரை எவ்வித பாதிப்புகளும் பதிவாகவில்லை.
இந்த கண்ணாடிகள் 2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை கனடாவில் 120 ஜோடிகளும், அமெரிக்காவில் 1,643 ஜோடிகளும் விற்பனையாகியுள்ளன.
மேலும், திரும்பப் பெறப்பட்ட (Recall) இத்தகைய ஆபத்தான பொருட்களை கனடாவில் மீண்டும் விற்பனை செய்வதோ, விநியோகிப்பதோ அல்லது இலவசமாகக் கொடுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் Health Canada நினைவூட்டியுள்ளது.
