கனடா தோல்வியடைந்தும் உலகக்கிண்ண நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி!

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலையின் இறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்து (Switzerland) அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் கனடா (Canada) தோல்வியடைந்துள்ளது.

எனினும், குழு ‘B’ இல் இரண்டாம் இடத்தைப்பிடித்து கனடா அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்ற சுவிட்சர்லாந்து குழுவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 46வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் (Ruben Vargas) முதல் கோலையும், 57வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி (Johan Manzambi) இரண்டாவது கோலையும் அடித்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கனடா அணியின் மாற்று வீரர் புரோமிஸ் டேவிட் (Promise David), 76வது நிமிடத்தில் அணியின் ஒரேயொரு கோலை அடித்தார்.

முன்னதாக கத்தார் (Qatar) அணியுடனான போட்டியில் காலில் பலத்த காயமடைந்த கனடாவின் முக்கிய நடுகள வீரர் இஸ்மாயில் கோனே (Ismaël Koné), சக்கர நாற்காலியில் அமர்ந்து மைதானத்திற்கு வந்து ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்.

அடுத்ததாக, வரும் ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ள நாக்-அவுட் சுற்றில், குழு ‘A’ இன் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியுடன் கனடா மோதவுள்ளது.

அதேவேளை, சுவிட்சர்லாந்து ஜூலை 2ஆம் திகதி வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளது.

 

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles