கனடாவில் விடுமுறை விடுதிகளின் கட்டணம் மீண்டும் உயர்வு!

கனடாவில் விடுமுறை கால பொழுதுபோக்கு விடுதிகளின் (Vacation homes) கட்டணம் இந்த ஆண்டு 4 சதவீதம் வரை உயரும் என ராயல் லெபேஜ் (Royal LePage) தனது சமீபத்திய அறிக்கையில் கணித்துள்ளது.

இதன் மூலம் கனடாவில் ஒரு தனிக்குடும்ப பொழுதுபோக்கு விடுதியின் சராசரி கட்டணம் 604,552 டொலர்களாக  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாண ரீதியாகப் பார்க்கும்போது, சஸ்காட்சுவான் (Saskatchewan) மற்றும் மேனிடோபா (Manitoba) ஆகிய மாகாணங்களில் அதிகபட்சமாக 5.5 சதவீத விலை உயர்வு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணம் இப்போதும் அதிக விலையுயர்ந்த பகுதியாகத் திகழ்கிறது.

ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் விலை 2 சதவீதம் உயர்ந்து 643,722 டொலர்களை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரக் கசப்புணர்வுகள் காரணமாக, பல கனடியர்கள் உள்நாட்டிலேயே சுற்றுலாத் தலங்களைத் தேடுவதால் (Buy Canadian movement) இந்த விடுதிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக ரோயல் லெபேஜ் தலைவர் பில் சோப்பர் (Phil Soper) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அலுவலகங்களுக்குத் திரும்பும் (Return-to-office) கட்டாயத்தால், பெருந்தொற்று காலத்தில் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த சிலர் மீண்டும் நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Related Articles

Latest Articles