கனடாவில் வாகனம் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

cp24

கனடாவின் Ontario மாகாணம் Simcoe பகுதியைச் சேர்ந்த Brooke Shaw எனும் பெண், சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட 2024 Volkswagen Taos ரக SUV வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த வாகனம் முன்பு ஒருவரால் குத்தகைக்கு பெறப்பட்டு திருப்பி அளிக்கப்பட்ட (Lease Return) வாகனம் என்றே விற்பனையாளர் தரப்பில் அவரிடம் கூறப்பட்டுள்ளது.

ஆனால், காரின் கையுறை பெட்டியில் (Glove Box) இருந்த ஆவணங்களை சோதித்த போது, அது Enterprise நிறுவனத்தின் தினசரி வாடகை காராக (Daily Rental Car) பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வாகன விற்பனையாளரிடம் முறையிட்டபோது, ஒப்பந்த பத்திரத்தில் “Previous Daily Rental” எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதால், இதை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

அவசரத்தில் கையெழுத்திட்டதாகவும், இதுபற்றி தன்னிடம் தெளிவாகக் கூறப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Ontario Motor Vehicle Industry Council (OMVIC) விதிகளின்படி, ஒரு வாகனம் வாடகை காராகவோ, டாக்ஸியாகவோ அல்லது பொலிஸ் வாகனமாகவோ பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை வாடிக்கையாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து CTV News ஊடகத்திடம் முறையிட்டதை அடுத்து, வாகன விற்பனையாளர் நிறுவனம் அவருக்கு பணத்தில் ஒரு பகுதியைத் திரும்ப வழங்க ஒப்புக்கொண்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

Previous articleOSAP நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தம்! மாணவர்களுக்கு மின்னஞ்சல்!
Next articleவெள்ளிக்கிழமை Lotto Max குலுக்கல்: 80 மில்லியன் டொலராக உயர்ந்த பிரமாண்ட பரிசுத் தொகை!