கனடாவில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ALS பாதிப்பு – கவனம் செலுத்துவதாக ஒட்டாவா அறிவிப்பு!

ctvnews

கனடாவில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு (Military Veterans) ALS நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உரிய கவனம் செலுத்துவதாக Ottawa அரசு தெரிவித்துள்ளது.

இக்காரணத்தைக் கண்டறியும் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு 50 மில்லியன் டொலர் நிதி ஒதுக்க வேண்டும் என ALS Society of Canada அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty, இந்த ஆய்வறிக்கைகள் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டாலும், இராணுவ சேவைக்கும் ALS நோய்க்கும் நேரடியான தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இப்போதைக்குக் கிடைக்கவில்லை என்றார்.

இருப்பினும், இது தொடர்பாகக் கூடுதலாக ஆராய்வோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், கனடா கடற்படையில் (Royal Canadian Navy) 16 ஆண்டுகள் பணியாற்றி இத்தீநுண்மியால் காலமான Bill Duff போன்ற பல வீரர்களின் குடும்பத்தினர், எதிர்கால சந்ததியினரைக் காக்க மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்கி உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Previous articleஅமெரிக்காவில் ஆசிரியரை சுட்ட மாணவன் – சிறைக்கு செல்வது குறித்து கவலை இல்லையென ஆக்கிரோஷம்!
Next articleISIS தீவிரவாதியைத் திருமணம் செய்து கொண்ட கனடா பெண் – தீவிரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்!