கனடாவில் மீண்டும் வேகமெடுக்கும் “Buy Canadian” இயக்கம்!

கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் “Buy Canadian” என்ற இயக்கம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், கனடியப் பொருட்களை முன்னுரிமைப்படுத்தும் இந்த இயக்கத்தின் வேகம் சற்றுக் குறைந்திருந்தது.

ஆனால் அமெரிக்கா, ஓகஸ்ட் 22 முதல் 28 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நிலைமை மீண்டும் மாறியுள்ளது. இதற்குப் பதிலடியாக கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு புதிய எதிர்வரிகளை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 8 முதல், 28 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 15, 25, 50 சதவீதம் வரை கனடா வரி விதிக்கவுள்ளது. 

Steel, dairy products, household appliances, agricultural equipment, electronics உள்ளிட்ட பல பிரிவுகள் இதில் அடங்குகின்றன.

இந்த நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாக கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களைத் தேடும் நுகர்வோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக சில்லறை வணிகத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடிய உற்பத்திகளை ஆதரிப்பதற்காக சற்றுக் கூடுதல் விலை கொடுத்தாவது Canadian products வாங்க பல நுகர்வோர் தயாராக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுவதாக Narrative Research நிறுவனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கனடாவின் மிகப்பெரிய grocery நிறுவனங்களில் ஒன்றான Loblaw, வரிகளால் விலை பாதிக்கப்படும் அமெரிக்கப் பொருட்களை அடையாளப்படுத்த “T” குறியீட்டை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அதேவேளை கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண Maple Leaf குறியீடும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த வர்த்தக மோதல் நீண்டகாலம் தொடருமானால், retail sales குறைவது, சில வணிகங்கள் பாதிக்கப்படுவது மற்றும் வேலைவாய்ப்புகளிலும் தாக்கம் ஏற்படுவது போன்ற அபாயங்கள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Toronto Mayor Olivia Chow-வும் கனடியர்கள் உள்ளூர் வணிகங்களையும் கனடியப் பொருட்களையும் தொடர்ந்து ஆதரிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles