கனடாவில் நாய் கடித்த விவகாரம் – பெண்ணிற்கு $392,000 நிதியுதவி வழங்க நீதிமன்றம் தீர்ப்பு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தின் ஓகனகன் (Okanagan) பகுதியில், சங்கிலியால் கட்டப்படாத நாய் ஒன்று தாக்கியதில் பெண்ணொருவர் காயமடைந்திருந்தார்.

நாய் உரிமையாளரின் கவனக்குறைவுக்காக $392,000 டொலர்களுக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரினா ஷ்ரோட் (Kaarina Schrott) என்ற உரிமம் பெற்ற நடைமுறை செவிலியர், கடந்த 2020 டிசம்பரில் வெர்னான் (Vernon) பகுதியில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஜோஸ்லின் கெட்டன் ரோஜர் (Jocelyn Gaetan Roger) என்பவருக்கு சொந்தமான பெரிய நாய் இவரைத் தாக்கியது.

இந்தத் தாக்குதலால் ஷ்ரோட்டின் முழங்காலில் ஏற்பட்ட கடுமையான முறிவு மற்றும் தசைநார் கிழிசல் காரணமாக அவரது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கால்களை மடக்கவோ, மண்டியிடவோ முடியாத நிலை நிரந்தரமானதால், அவர் நடத்தி வந்த செவிலியர் சேவை வணிகத்தையும் (One Step Foot Care Inc.) விற்க நேரிட்டது.

வழக்கிற்கு நாய் உரிமையாளர் பதிலளிக்காத நிலையில், பி.சி. உச்ச நீதிமன்ற (B.C. Supreme Court) நீதிபதி காரி வோல்ப் (Karrie Wolfe) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதன்படி, வருமான இழப்பு மற்றும் எதிர்கால பராமரிப்பு செலவுகளுக்காக $392,352 டொலர்களும், கூடுதல் சட்டச் செலவுகளாக $27,000 டொலர்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles