கனடாவில் சோகம் – நெடுஞ்சாலை 401 விபத்தில் OPP பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது கடமையின் போது நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை 5:30 மணியளவில், கோபர்க் (Cobourg) நகரின் நெடுஞ்சாலை 401-இல் Burnham Street North அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பொலிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த அதிகாரி சார்ஜன்ட் பிராண்டன் மல்க்கம் (Sgt. Brandon Malcolm) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 2020 முதல் Northumberland பிரிவில் பணியாற்றி வந்தவர்.

முதல்வர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் பொலிஸ் பணிப்பாளர் தோமஸ் கார்ரிக் (Thomas Carrique) ஆகியோர் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

“மக்களின் பாதுகாப்பிற்காகத் தினமும் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றும் வீரர்களுக்கு இது ஒரு பேரிழப்பு” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து காரணமாக மூடப்பட்டிருந்த நெடுஞ்சாலை 401-இன் இருபுறப் பாதைகளும் விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்துத் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Latest Articles