கனடாவில் இளைஞர் வேலைவாய்ப்பு அதிகரிப்பு – ஆனால் இந்த முன்னேற்றம் Summer-க்கு மட்டும் தானா?

கனடாவில் வேலை தேடும் இளைஞர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு சற்று நம்பிக்கையான செய்தி வெளியாகியுள்ளது.

July மாதத்தில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை வீதம் 12.6 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

குறிப்பாக summer முடிந்ததும் மீண்டும் படிப்புக்குத் திரும்பும் மாணவர்களின் வேலையின்மை வீதம் 15.1 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு July-ல் இது 17.5 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக கனடா July மாதத்தில் சுமார் 75,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு, தேசிய வேலையின்மை வீதம் 6.4 ஆக குறைந்துள்ளது.

ஆனால் வேலை கிடைக்காத இளைஞர் எண்ணிக்கை இன்னும் பெருந்தொற்றுக்கு முந்தைய சராசரியை விட அதிகமாகவே உள்ளது.

Summer seasonal jobs முடிந்த பிறகும் இந்த முன்னேற்றம் தொடருமா? அல்லது இளைஞர்கள் மீண்டும் கடினமான job market-ஐ எதிர்கொள்வார்களா? என்பதே இப்போது முக்கிய கேள்வி.

Related Articles

Latest Articles