கனடாவிலும் Lake America? எப்படி நடந்தது இந்த மாற்றம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், Lake Ontario-வை அமெரிக்க பயன்பாட்டில் “Lake America” என அழைக்கும் Executive Order ஒன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பெயர் கனடாவிலும் சில முக்கிய இணையத்தளங்களில் தோன்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Ontario-வின் மின்சார நிறுவனமான Hydro One, பொதுப் போக்குவரத்து நிறுவனமான Metrolinx, LCBO மற்றும் கனடா அரசின் Housing, Infrastructure and Communities இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் சில online maps-களிலும் “Lake Ontario” என்பதற்குப் பதிலாக “Lake America” என்று காணப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளங்கள் பயன்படுத்தும் Google Maps உள்ளிட்ட third-party mapping services காரணமாகவே இந்தப் பெயர் தோன்றியுள்ளதாக Ontario அரசு தெரிவித்துள்ளது.

Hydro One-வும் இது தவறாகக் காட்டப்படுவதாக ஒப்புக்கொண்டு, தங்களின் third-party map provider உடன் இணைந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

Google-ன் அறிவிப்பின்படி, அமெரிக்காவில் Google Maps பயன்படுத்துபவர்களுக்கு “Lake America” என்றும், கனடாவில் பயன்படுத்துபவர்களுக்கு தொடர்ந்து “Lake Ontario” என்றும் காண்பிக்கப்படும். கனடா மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சில பயனர்களுக்கு இரண்டு பெயர்களும் காண்பிக்கப்படலாம்.

இதற்கிடையில் Ontario அரசு, தனது இணையத்தளங்களில் Lake Ontario சரியான பெயரில் காட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது.

ஆக, டிஜிட்டல் வரைபடங்களில் ஏற்பட்ட ஒரு மாற்றம் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Related Articles

Latest Articles