கனடாவிலிருந்து Alberta பிரிந்தால் என்ன நடக்கும்?

Canada-விலிருந்து Alberta தனி நாடாகப் பிரிந்தால், அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும்? இதற்கான விரிவான திட்டம் ஒன்றை Alberta Transition Council வெளியிட்டுள்ளது.

சுமார் 214 பக்கங்களைக் கொண்ட இந்த Transition Plan-ல் banking, currency, defence, policing, courts, immigration, pensions, oil and gas, international trade, First Nations உடனான உறவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள lawyer Keith Wilson, Alberta தனி நாடாக மாறினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய குழப்பம் ஏற்படாமல், தற்போது உள்ள அமைப்புகளை பெரும்பாலும் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்.

Immigration தொடர்பில், ஏற்கனவே சட்டபூர்வமாக Alberta-வில் வசிப்பவர்களின் status-ஐ பாதுகாத்து, ஆரம்பகட்டத்தில் Canada-வின் visa மற்றும் permit முறைகளைப் போன்ற அமைப்பை தொடரவும் இந்தத் திட்டம் பரிந்துரைக்கிறது.

ஆனால் மிகப்பெரிய கேள்வி — இதற்கான செலவு எவ்வளவு?

Alberta Transition Council இதுவரை முழுமையான செலவுக் கணக்கை வெளியிடவில்லை. அதனை September மாதத்தின் பின்னர் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

மறுபுறம் Canada West Foundation, Alberta தனிநாடாக மாறுவதற்கான ஆரம்பச் செலவு குறைந்தபட்சம் சுமார் 200 billion dollars இருக்கலாம் என எச்சரித்துள்ளது.

Premier Danielle Smith முன்பு இந்தச் செலவு சுமார் 400 billion dollars வரை இருக்கக்கூடும் என மதிப்பிட்டிருந்தார்.

முக்கியமாக, October 19ஆம் திகதி நடைபெறும் Alberta பொதுவாக்கெடுப்பு உடனடியாக Canada-விலிருந்து பிரிவதை தீர்மானிக்காது.

Albertans, Canada-வில் தொடர வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினைக்கான கட்டாய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான சட்ட நடவடிக்கையை தொடங்க வேண்டுமா என்பதையே தீர்மானிக்க உள்ளனர்.

இதனால் Alberta-வின் எதிர்காலம் குறித்த விவாதம் Canada முழுவதும் முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது.

Related Articles

Latest Articles