கனடாவின் றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு (Greater Toronto Area – GTA) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பினால் (Environment and Climate Change Canada) ‘செம்மஞ்சள்’ (Orange) மட்டத்திலான கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இவ்வாறான எச்சரிக்கைகள் அரிதாகவே விடுக்கப்படும்.
இந்நிலையில், வாரம் முழுவதும் கடுமையான வெப்பமும் புழுக்கமும் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
முக்கியமாக செவ்வாய்க்கிழமை (Tuesday) வெப்பநிலை 33°C ஆக பதிவாகினாலும், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக அது 44 ஆக உணரப்படும்.
அதனைத் தொடர்ந்து வரும் கனடா தினமான (Canada Day) புதன்கிழமை (Wednesday) வெப்பநிலை 36°C ஆக உயர்வடைந்து, ஈரப்பதத்துடன் சேர்த்து 48 ஆக மிகக் கடுமையாக உணரப்படும் என தலைமை வானிலை ஆய்வாளர் நடாஷா ரம்சஹாய் (Natasha Ramsahai) எச்சரித்துள்ளார்.
வியாழக்கிழமையும் (Thursday) இதே நிலை நீடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனால் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை மூடிய வாகனங்களுக்குள் ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதியளவு நீர் பருகி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறு வானியை ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கடுமையான வெப்ப அலையில் இருந்து வார இறுதியில் (சனிக்கிழமை, ஞாயிறு) சற்று நிவாரணம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










