கனடாவின் ஸ்டோனி க்ரீக் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு!

கனடாவின் (Canada) ஹேமில்டன் (Hamilton) பகுதியில் அமைந்துள்ள ஸ்டோனி க்ரீக் (Stoney Creek) என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கேண்டில்வுட் டிரைவ் (Candlewood Drive) பகுதியிலுள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் அதிகாலை 2:25 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஹேமில்டன் பொலிஸார் (Hamilton Police) தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இரண்டு ஆண்களும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக ஹேமில்டன் பொலிஸாரின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு (Homicide Unit) தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Related Articles

Latest Articles