கனடாவின் ‘மினி பட்ஜெட்’ – பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வழங்கப்போகும் நற்செய்தி’ என்ன?

கனடாவின் நிதி நிலைமை குறித்து பிரதமர் மார்க் கார்னி நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொருளாதார அறிக்கை ஒரு ‘மினி பட்ஜெட்’டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் $78.3 பில்லியன் பற்றாக்குறை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் அது $25.5 பில்லியனாக மட்டுமே உள்ளது.

“நாங்கள் சிறந்த நிதி மேலாளர்கள்” என இதற்குக் கார்னி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய $25 பில்லியன் ஆரம்ப மூலதனத்துடன் புதிய நிதி ஒன்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ஜிஎஸ்டி (GST) சலுகை அதிகரிப்பு மற்றும் உழைப்பாளர் தினம் (Labour Day) வரை எரிபொருள் வரி இடைநிறுத்தம் போன்ற திட்டங்கள் இதில் இடம்பெறும்.

கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), அரசின் செலவினங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது “கிரெடிட் கார்டு பட்ஜெட்” எனச் சாடியுள்ளார்.

அண்மைய இடைத்தேர்தல் வெற்றிகளுக்குப் பின், லிபரல் கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளதால், இந்த நிதியறிக்கையை நிறைவேற்றுவதில் கார்னிக்குச் சிக்கல் இருக்காது.

ஈரான் போர் காரணமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலையினால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

இருப்பினும், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் சவாலாகவே உள்ளன என நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் (François-Philippe Champagne) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles