கனடா (Canada) அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய எல்லைச் சட்டம் (C-12), அங்குள்ள LGBTQ+ அகதிகளைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கனடாவிற்குள் நுழைந்து ஓராண்டுக்குள் அகதி அந்தஸ்து கோர வேண்டும் என்ற புதிய விதிமுறையே இதற்குக் காரணமாகும்.
இதன் மூலம், சுமார் 30,000 அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்களது சொந்த நாடுகளில் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் சூழலிலும், பலர் பயம் மற்றும் தயக்கம் காரணமாக ஓராண்டுக்கு பின்னரே அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர்.
தற்போது இந்த புதிய சட்டத்தினால், தங்களை கனடா அரசு வலுக்கட்டாயமாக சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அகதிகள் வாழ்கின்றனர்.
இந்த சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து தற்போது கனடா நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.










