கடைசி நிமிடத்தில் பயணத்திட்டம் மாற்றப்பட்டதால் $22,000 ரீபண்ட் மறுப்பு – Ontario தம்பதி வேதனை!

cp24

Canada நாட்டின் Ontario-வைச் சேர்ந்த தம்பதி ஒருவர், AmaWaterways நிறுவனத்தின் மூலம் $22,000 செலவில் 11 நாட்கள் கொண்ட European ஆற்றுப் படகுப் பயணத்திற்கு (River cruise) திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, நிறுவனம் அதன் பயணத்திட்டத்தை (Itinerary) மாற்றியமைத்துள்ளது.

Amsterdam முதல் Switzerland வரை செல்லவிருந்த பயணத்திற்குப் பதிலாக, Netherlands மற்றும் Belgium வழியிலான மாற்றுப் பயணத்தை நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில் விருப்பமில்லாததால் பணத்தைத் திரும்பக் கேட்ட Brian Lobaskie என்பவருக்கு, ரீஃபண்ட் தர AmaWaterways மறுத்துவிட்டது.

ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஆற்று நீர்மட்டம் குறைந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பயணம் ரத்து செய்யப்படாததால் ரீஃபண்ட் வழங்க முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 100% மதிப்புடைய மாற்றுப் பயணக் கடன் (Travel Credit) வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால், அடுத்த ஆண்டிற்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், இந்த முடிவு தமக்கு நியாயமற்றது என Brian Lobaskie கவலை தெரிவித்துள்ளார்.

Previous articleVaughan பகுதியில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஓட்டுநர் – சரணடையுமாறு காவல்துறை எச்சரிக்கை!
Next articleManitoba பல் மருத்துவமனையில் அலட்சி போக்கு – 23 வயதுப் பெண் மரணம்!