ஒவ்வாமையால் அவதிப்படு கனடியர்களுக்கு மோசமான இடம் விண்ட்சர் – தும்பல் நகரம் எனவும் பெயர்!

மகரந்த ஒவ்வாமையால் (Pollen allergies) பாதிக்கப்பட்டவர்கள் வசிப்பதற்கு கனடாவின் விண்ட்சர் (Windsor) நகரம் மிகவும் கடினமான இடமாக முதலிடம் பிடித்துள்ளது.

ஒட்டாவாவைச் சேர்ந்த ஏரோபயாலஜி (Aerobiology) ஆராய்ச்சி நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்காக வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்திருக்கிறது.

கனடாவில் ஐந்தில் ஒருவருக்கு (சுமார் 8 முதல் 10 மில்லியன் மக்கள்) மரம், புல் மற்றும் களைகளின் மகரந்தத்தால் சளி, தும்மல், இருமல் மற்றும் கண்கள் அரிப்பு போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இங்குள்ள சாதகமான காலநிலை, அடர்த்தியான தாவரங்கள் மற்றும் ஓக், பிர்ச் போன்ற ஒவ்வாமையைத் தூண்டும் மரங்கள் அதிகளவில் இருப்பதன் காரணமாக, இங்கு மகரந்தக் காலம் நீண்டதாகவும் தீவிரமாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி முதலிடத்தில் விண்ட்சர் (Windsor), இரண்டாம் இடத்தில். ஹாமில்டன் (Hamilton), மூன்றாம் இடத்தில் பாரி (Barrie), நான்காம் இடத்தில் விக்டோரியா (Victoria), ஐந்தம் இடத்தில் கிங்ஸ்டன் (Kingston) நகரங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

செயின்ட் ஜான்ஸ் (St. John’s), ரெஜினா (Regina) மற்றும் ஹாலி பாக்ஸ் (Halifax) போன்ற நகரங்களில் மகரந்தப் பாதிப்பு குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மகரந்தச் செறிவு அதிகமாக இருக்கும் நாட்களில் ஒவ்வாமை உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles