ஒரே நபரை மணந்த பல கனடியப் பெண்கள் – அம்பலமான பலதார மண மோசடி!

கனடாவின் பல மாகாணங்களிலும் அமெரிக்காவிலும் ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்ற நபர், நான்கு வெவ்வேறு பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றித் திருமணம் செய்துள்ள அதிர்ச்சித் தகவல் W5 புலனாய்வில் தெரியவந்துள்ளது.

2013 முதல் பத்து ஆண்டுகளில், விவாகரத்து பெறாமலேயே அடுத்தடுத்து நான்கு திருமணச் சான்றிதழ்களை இவர் பெற்றுள்ளார்.

இந்த நபர் தன்னை ஒரு முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர் (U.S. Marine) என்றும் தற்காப்புக் கலை வீரர் என்றும் அறிமுகப்படுத்தி, பெண்களைக் கவர்ந்துள்ளார்.

சாரா (Sara) மற்றும் எம்மா (Emma) ஆகிய கனடியப் பெண்கள், “Are we dating the same guy” என்ற சமூக வலைதளப் பக்கம் ஊடாகவே தங்களது கணவன் ஒருவரே என்பதை அறிந்துகொண்டனர்.

ஜேசன் வாஷிங்டன் வன்முறையில் ஈடுபட்டதுடன், குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமானதற்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார்.

இது குறித்து ஜேசனிடம் கேட்டபோது, விவாகரத்துப் பத்திரங்களைச் சரிபார்ப்பது பெண்களின் கடமை என்று கூறித் தப்பிக்க முயன்றுள்ளார்.

தங்களுக்கு முன்னரே திருமணமான ஒருவருக்கு மீண்டும் திருமண உரிமம் வழங்கியது எப்படி எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தச் சட்ட சிக்கலை பயன்படுத்தித் தங்களைப் போன்ற பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles